search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குறைபாடுள்ள குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை
    X

    குறைபாடுள்ள குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை

    உடலில் குறைபாடு உள்ள குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்த கட்டளைகளை கீழே பார்க்கலாம்.
    உடலில் குறைபாடு உள்ள குழந்தைகளை, 'முடியாதவன்' 'முடங்கி இருப்பவன்' 'ஊனமுற்றவன்' என்று எதிர்மறையாகக் குறிப்பிடுவதற்கு பதில் உடலில் குறைபாடு உள்ள, அல்லது நடமாடுவதில் குறைபாடு உள்ள குழந்தை என்று கூறலாம். 'சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பவர்' என்பதற்குப் பதிலாக, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் குழந்தை' என்று குறிப்பிடலாம். 'செவிடு, ஊமை' என்பதற்குப் பதிலாக, 'கேட்பதிலும் பேசுவதிலும் பிரச்சினை உள்ள குழந்தை' என்று கூறலாம் மன வளர்ச்சி குன்றியவன் என்பதற்குப் பதிலாக மூளைச் செயல் பாட்டில் குறைபாடு உள்ள குழந்தை என்று கூறலாம்.

    1. குறைபாடுகள் உள்ள குழந்தைகளை, குறைபாடுகள் ஏதும் இல்லாத குழந்தைகளோடு ஒன்றிணைத்து சமமான நிலையில் வைத்துக் குறிப்பிடுங்கள். உதாரணமாக உடல் குறைபாடு உள்ள ஒரு மாணவன், தன்னைவிட வயது குறைவான, குறைபாடுகள் எதுவும் இல்லாத குழந்தைக்குப் பாடங்கள் சொல்லிக்கொடுக்க முடியும், உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் அவ்வாறான குறைபாடுகள் இல்லாத குழந்தைகளுடன், எந்தெந்த விதங்களில் பழக முடியுமோ, அத்தனை விதங்களிலும் பழக வேண்டும்.

    2. குறைபாடுகள் உள்ள குழந்தைகளை, தங்களது எண்ணங்களை, உணர்வுகளைச் சுதந்திரமான முறையில் வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுங்கள் கல்வி மற்றும் பள்ளி சம்பந்தமான திட்டங்கள், செயல்பாடுகளில் குறைபாடுள்ள குழந்தைகளுடன் அவ்வாறான குறைபாடுகள் குழந்தைகளுடன் சேர்த்துப் பணியாற்ற அனுமதியுங்கள்.

    3. குழந்தைகளை நல்லமுறையில் கவனித்து, அவர்களிடம் உள்ள குறைபாடுகளை கவனித்து அறிந்துகொள்ளுங்கள். குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதும் இளம் வயதில் கல்வி கற்பதின் ஒரு பகுதிதான். குறைபாடுகளை எந்த அளவுக்கு விரைவாகக் கண்டுபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு விரைவாகவும் பலனுள்ள வகையிலும் சிகிச்சை அளிக்கவும் குறைபாடுகளின் கடுமையைக் குறைக்கவும் முடியும்.

    4. குறைபாடுகளைக் கண்டுபிடிக்க முடிந்த பின்னர், தகுந்த சிகிச்சை, பரிசோதனைகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

    5. குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பயன்படுத்துவதற்கு, புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், பாடங்கள் கற்றுக்கொள்ளப் பயன்படும் உபகரணங்கள் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்யுங்கள். கண்பார்வை குறைபாடுள்ள குழந்தைக்கு, பெரிய எழுத்தில் எழுதிப் பாடங்களைக் கற்பிப்பது, முன்னால் உட்காரவைப்பது போன்றவற்றைச் செய்யலாம். நடமாடுவதில் பிரச்சினை உள்ள குழந்தை எளிதாக நுழையும் விதத்தில் வகுப்பறையை மாற்றி அமையுங்கள். குறைபாடுகள் குறித்த நேர்மறை எண்ணங்களை மாணவர்கள் மனத்தில் உருவாக்கும் விதத்தில் பாட முறைகள், விளையாட்டு, மற்றும் இதர நடவடிக்கைகளில் மாற்றம் செய்யுங்கள்.

    6. குறைபாடுகள் உள்ள குழந்தைக்கு எந்த வகையான சிறப்பான தனித் தேவைகள் இருக்கும் என்பது பற்றி, அவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குத் தெரியப்படுத்துங்கள். பெற்றோர்களிடத்தில் தனியாகவும் பொது நிகழ்ச்சிகளிலும் இவற்றைப் பற்றி உரையாடுங்கள்.

    7. தங்கள் குழந்தையின் குறைபாட்டால் விரக்தி அடைந்திருக்கும் பெற்றோர்களிடத்தில், அத்தகைய குழந்தைகளை எப்படிச் சரியான விதத்தில் கையாள முடியும் என்பது குறித்த எளிய வழிமுறைகளைக் கற்றுக்கொடுங்கள். பொறுமையைக் கடைப்பிடிக்கவும், கோபத்தால் அக்குழந்தைகளைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும் அவர்களுக்கு உதவுங்கள்.

    8. உடல் குறைபாடுகள் உள்ள குழந்தையின் உடன் பிறந்தவர்களும் இதர குடும்ப உறுப்பினர்களும் எப்படி நடந்துகொண்டால் பெற்றோர்களின் விரக்தி, மன வேதனை ஆகியவற்றைக் குறைக்கலாம் என்பது பற்றி வழிகாட்டுங்கள்.

    9. உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களைப் பள்ளி சம்பந்தப்பட்ட செயல்பாடுகள், திட்டங்களை முடிவு செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்.
    Next Story
    ×