என் மலர்

  ஆரோக்கியம்

  சிறிய குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்
  X

  சிறிய குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம்.
  நாள்தோறும் புதிதுபுதிதாய் வந்து கொண்டிருக்கும் நோய்கள் மனிதன் செயற்கைகளில் இருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன.

  பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். சர்க்கரை நோயை கண்டு கொள்ளாமல் விடும் போது அதன் அடுத்தடுத்த அபாயங்களாக சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பு பாதிப்பு, பார்வை இழப்பு, ரத்தக் குழாய் மற்றும் நரம்புகள் சிதைவு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக சர்க்கரை நோயில் இரண்டு வகை உள்ளது.

  முதல் வகை உள்ளவர்களுக்கு அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி, காரணமில்லாத எடை இழப்பு, தளர்ச்சி மற்றும் சோர்வு காணப்படும். பெரும்பாலானவர்களை இரண்டாவது வகை சர்க்கரை நோயே அதிகம் தாக்குகிறது. இந்த வகை சர்க்கரை நோய் ஒரு காலத்தில் 40 வயதினருக்கு வந்தது.

  பின்னர் நோய் தாக்கும் வயது 30ஆக இருந்தது. தற்போது பள்ளிக் குழந்தைகளையும் தாக்குவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மனஅழுத்தம், அதிக எடை, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த வகை சர்க்கரை நோயுள்ள பலருக்கு எந்த அறிகுறியும் தோன்றாது.

  ஒரு சிலருக்கு அதிகளவு தாகம், மங்கலான பார்வை, தோல் ஆகியவற்றில் தொற்று நோய் தாக்குதல், காயம் ஆறுவதில் தாமதம், எரிச்சல், கைகால்கள் மரத்துப் போதல், தொடு உணர்ச்சியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

  இது போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். உடல் உழைப்புக்கு தகுந்த சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடுவது அவசியம். நேரம் தவறி சாப்பிடுவதும் தவறு.

  நார்ச்சத்து உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மருந்து, உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியானது இதயத்தையும் ரத்தக் குழாய்களையும் சீராக இயங்க வைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

  சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இது போன்ற பழக்கங்களை நடைமுறைப்படுத்திக் கொள்வதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் எதிர் விளைவுகள் ஏற்படலா
  Next Story
  ×