என் மலர்

  ஆரோக்கியம்

  குழந்தைகள் தலையை சொரிவதால் உண்டாகும் புண்
  X

  குழந்தைகள் தலையை சொரிவதால் உண்டாகும் புண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சில குழந்தைகளுக்கு தலை சொரிந்து சொரிந்து அவர்களுக்கு புண்ணாகிவிடும். இதற்கான தீர்வுகளை பார்க்கலாம்.
  * சில குழந்தைகள் பிறந்தது முதலே அடிக்கடி சிறுநீர் கழித்தபடி இருப்பார்கள். ஜட்டியை மாற்றிய சில நிமிடங்களிலேயே நனைத்து விடுவார்கள். இதனால், அந்த இடமே உப்புநீரில் ஊறியதுபோல் தோலுரிந்து புண்ணாகிவிடும். மேலும், சில குழந்தைகளுக்கு தலை சொரிந்து சொரிந்து அவர்களுக்கு புண்ணாகிவிடும். இதற்கான தீர்வுகளை பார்க்கலாம்.

  பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் அடிக்கடி குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்கள். பசும் பால் அல்லது ஆவின் பால் தருவதாக இருந்தால், அதனுடன் தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. டின் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும்.

  * குழந்தையின் தலை புண் குணமாக, குழந்தை நல மருத்துவரை அணுகவேண்டும், அவர் தரும் ஆயின்மெண்டைத் தடவி வாருங்கள். நிச்சயம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இறுக்கமான உடைகளை அணிவிப்பதைத் தவிருங்கள்.

  * அடுத்தது, குழந்தையின் தலையில் ஏற்பட்டிருக்கும் புண்ணுக்கு ‘சட்டிப் பத்து’ என்று பெயர். இது எண்ணெய்ப் பசை, அழுக்கு, தலையில் போடும் முகப்பவுடர், பூஞ்சைக் காளான் (ஃபங்கஸ்) இவையெல்லாம் கலந்த இன்ஃபெக்ஷனால் ஏற்படுவது. இதற்கு ஆன்ட்டி ஃபங்கஸ், ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஸ்டீராய்டு கலந்த ஆயின்மெண்டைத் தடவினால் சரியாகிவிடும்.

  * நீங்கள் கருதுவதுபோல, மருதாணி எண்ணெய், கறிவேப்பிலை எண்ணெய் போன்றவற்றை உபயோகித்ததாலும் தலையில் புண் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. சிலர், குழந்தையின் தலையில் முகப் பவுடரைப் போட்டு விடுவார்கள். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே. இந்த பவுடர், தலையில் உள்ள சின்னஞ்சிறு துவாரங்களை அடைத்துவிட வாய்ப்புண்டு.

  * பொதுவாக, குழந்தை பிறந்து மூன்றாண்டுகளுக்கு எண்ணெய் குளியலே கூடாது. வாரம் ஒருமுறை ஷாம்பு குளியலே போதுமானது. ‘கண்ணீர் வராத பேபி ஷாம்பு’ என்றே கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துங்கள். விரைவில் பலன் கிடைக்கும்.
  Next Story
  ×