என் மலர்

  ஆரோக்கியம்

  உங்கள் குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள்
  X

  உங்கள் குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள்.
  இன்றைய பெற்றோர்கள், குழந்தைகள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்கின்றார்களோ, அவ்வாறே பெற்றோர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது. நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும்.

  குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். அவர்களுடைய குழந்தைத்தனத்தை ரசியுங்கள். அவர்களை சீக்கிரம் பெரியவர்களாக தூண்டாதீர்கள். இழந்த இளம் பருவத்தை மீண்டும் பெற இயலாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.

  நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்போதே நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையின் மீது உண்மையான அன்பு செழுத்துங்கள்.

  உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை அனுபவித்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குட்டி தேவதையைப் போன்ற ஊர்ந்து போவதாகட்டும் அல்லது ஒரு பிடித்த பாடலை பாடுவதாகட்டும். அதை எப்பொழுதும் அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணருங்கள்.

  நீங்கள் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் அனைத்து காரியங்களிலும் துணை புரியுங்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உள்ளது என்பதை தெரிவியுங்கள்.

  உங்களின் நிறைவேறாத கனவுகளை உங்களுடைய குழந்தையின் மீது சுமத்தி அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் விருப்பம் எது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால், குழந்தைகள் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற உங்களிடம் வருவதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள்.

  பெற்றோராகிய நீங்கள் குழந்தைகளின் முன் கெட்ட வார்த்தைகள் மற்றும் அசிங்கமான சண்டை போட வேண்டாம். ஏனெனில் குழந்தையின் கிரகிப்புத் திறன் என்பது மிகவும் அபாரமானது.
  Next Story
  ×