என் மலர்
ஆரோக்கியம்

சுவையான உருளைக்கிழங்கு கார போளி செய்வது எப்படி
உருளைக்கிழங்கு போளி மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - அரை கிலோ
கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 ஒரு மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
மைதா மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
நெய் - தேவைக்கு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு நன்றாக வறுத்த பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக போளி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடோற்றவும்.

* ஒரு உருண்டை எடுத்து வாழை இலையில் மெலிதாக தட்டி நடுவில் பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டி, தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு போளியை சுட்டு எடுக்கவும்.
* சுவையான உருளைக்கிழங்கு போளி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story