என் மலர்

  ஆரோக்கியம்

  மங்கையர் கையில் வண்ணமயமாய் ஜொலிக்கும் கல்பதித்த வளையல்கள்
  X

  மங்கையர் கையில் வண்ணமயமாய் ஜொலிக்கும் கல்பதித்த வளையல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்ணை பறிக்கும் தங்க ஜொலிப்பும், பிரகாசமான வண்ண கற்களின் ஜொலிப்பும் இணைந்து மங்கையர் கரங்களில் வானவில்லாய் ஜொலிக்கின்றன.
  விலையுயர்த்த நவரத்தினங்களில் பெரும்பாலன கற்கள் வளையல்கள் மேற்புறத்தில் பதிக்க பயன்படுத்தப்படுகிறது. தங்க வளையல்களில் ஏரளாமான வடிவமைப்பு சிற்பங்கள் மலர்கள் செதுக்கப்பட்டாலும் தனிப்பட்ட கற்கள் பதித்த வளையல்கள் என்பது கூடுதல் ஈர்ப்பும், வனப்பும் கொண்டவை. கற்கள் பதித்த வளையல்கள் எனும் போது வைரம், பவளம், மாணிக்கம், மரகதம் முத்து போன்றவை பிரதான இடம் பிடிக்கின்றன.

  வண்ணமாய் ஜொலிக்கும் தங்க வளையல்கள் நங்கையரின் வளைகரத்தில் ஓர் வண்ண ஜாலத்தையே நிகழ்த்துகின்றன. கண்ணை பறிக்கும் தங்க ஜொலிப்பும், பிரகாசமான வண்ண கற்களின் ஜொலிப்பும் இணைந்து மங்கையர் கரங்களில் வானவில்லாய் ஜொலிக்கின்றன.

  பச்சை மரகதமும் பவள செம்மையும் கலந்த வளையல்கள்....

  கற்கள் பதித்த நகைகள் என்றாலே பசுமையின் பிரகாசமான மரகதமும், செழுமையின் சின்னமான செம்பவளமும் கனகச்சிதமான
  ஜோடிகளாய் பதியப்படுகின்றன. வளையல்களில் இவை இரண்டும் தனித்தவாறும் இணைந்தவாறும் பதிக்கப்படுகின்றன. பூக்கள் மற்றும் நவீன வடிவங்களில் நடுநடுவேயும், வளையல் முழுமையும் மரகத, பவள கற்கள் பதிக்கப்பட்டு உருவாகின்றன. பூக்களில் இதழ்கள், மயில்களின் கண், தோகை, பூக்களாய் என்றவாறு கற்கள் பதியப்படுகின்றது.

  பவள பூவும் நடுவில் மரகத கல்லும், இடைஇடையே இலைகளாய் மரகத கற்களும் பதியப்படுகிறது. ஒரு சில வளையல்களில் சிறு பூக்கள் கொடிகள் என்றவாறு பின்னப்பட்டு வளையல்கள் உருவாக்கப்படுகிறது. அகலமான ஒற்றை வளையல்களில் நடுவில் பெரிய கற்கள் பதியப்பட்டு வருகின்றன.

  அரை பந்து அணிவிக்கும் கல் வளையல்கள்....

  மெல்லிய தங்க கம்பிகள் வளையல் பகுதியின் மேற்புறம் முழுவதும் வெட்டப்பட்ட பந்து போன்ற அமைப்பு வரிசையாய் இணைக்கப்பட்டிருக்கும். அந்த தங்க அரை உருளை வடிவில் நடுநடுவே ஓர் அரை உருளை பவளப்பூவாயும், ஓர் அரை உருளை மரகத பூவாயும் பூத்திருக்கும். கலை செதுக்கல்களின் உச்சமாய் திகழும் இந்த வடிவமைப்பு வளையல்கள் அணிந்து செல்பவர்களின் கரங்களை நோக்கியே அனைவர் பார்வையும் விழும்.

  வெண்முத்து வளையல்கள்...

  முத்துக்கள் பதித்த தங்க வளையல்கள் பெரிய முத்துக்கள் பதித்தவாறு ஓப்பன் செட்டிங் கொண்ட வளையல்கள் என்றவாறு வருகின்றன. அதுபோல் சிறு முத்துக்கள் நிறைய கோர்க்கப்பட்ட வளையல்களும் வருகின்றன. கடம் போன்ற பழைய வளையல் அமைப்பில் சிறு மற்றும் பெரிய முத்துக்கள் பதித்தவாறும் வருகின்றன.

  வைரக்கற்கள் பதித்த வளையல்கள்.....

  வைரம் விலை அதிகமானது. ஆயினும் இன்றைய நாளில் பட்ஜெட் விலையில் வைரம் பதித்த வளையல்கள் அதிக கலைவேலைப்பாட்டுடன் உலா வருகின்றன. கம்பி வடிவ வளையலின் நடுவே தனித்தனி சிற்ப டிசைகள் வைரத்தில் உருவாக்கப்பட்டு தரப்படுகிறது. மேலும் கம்பி போன்ற வளையலின் மேற்புறம் சுற்றியும், சிறு வைரகற்கள் இடைவெளியின்றி பதியப்பட்டும், பூக்கள், உருளைகள், இலைகள் போன்ற வடிவில் மட்டும் வைரகற்கள் பதியப்பட்டும் தரப்படுகிறது. வளைந்த அலை வடிவிலான வளையல்களில் வைரகற்கள் ஜொலிக்கின்றன.

  அனைத்து மங்கையருக்குமே ஒரு செட் கல் வைத்த வளையல் வைத்திருக்கவேண்டும் என்ற பேரார்வம் உள்ளது. அதற்கேற்ப புதிய புதிய வடிவில் கல் பதித்த வளையல்கள் உருவாக்கப்படுகின்றன.
  Next Story
  ×