search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம்
    X

    சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம்

    முட்டைகோஸ் வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். முட்டைகோஸை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. முட்டைகோஸ் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டைகோஸ் - 200 கிராம்
    வடித்த சாதம் - ஒரு கப்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்),
    மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி  - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    தாளிக்க:


    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை:

    * கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொலபொலவென்று உதிர்ந்துவிடும்.

    * கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… பட்டை, மிளகு - சீரகத்தூள், கடலைப்பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

    * அடுத்து அதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும்.

    * இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    * சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×