search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரமாண்டமாய் மதிப்புமிக்க போல்கி நகைகள்
    X

    பிரமாண்டமாய் மதிப்புமிக்க போல்கி நகைகள்

    போல்கி எனப்படும் வெட்டபடாத வைரங்கள் பொருத்தப்பட்ட நகைக்கு தான் போல்கி நகைகள் என்று பெயர்.
    போல்கி நகைகள் என்பவை மிக பிரம்மாண்டமான தோற்றத்தில் அதே அளவிற்கு மிக மதிப்பு மிக்க நகைகளாக தோற்றமளிக்க கூடியவை. போல்கி எனப்படும் வெட்டபடாத வைரங்கள் பொருத்தப்பட்ட நகைக்கு தான் போல்கி நகைகள் என்று பெயர்.

    இதில் பயன்படுத்தப்படும் வைரங்கள் எந்தவிதமான செயற்கைமுஹைகளுக்கு உட்படுத்தப்படமாட்டாதவை. எந்தவிதமான ஆய்வு கூடங்களுக்கோ, சிந்தெடிங் முறைகளையோ காணாதவை. இயற்கையான முறையில் சுரங்கத்திலிருந்து வந்த அதே பளபளப்பு மற்றும் இயற்கையான வைரமே இந்த நகைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    போல்கி வைரங்கள் அதன் மதிப்பை ஒவ்வொரு நாளும் சந்தையில் அதிகரித்து கொண்டே போகும். அதில் செய்யப்படும் முதலீடு என்பது நல்ல லாபத்தை தரக்கூடியதே. பழங்கால தொட்டே இந்திய பாரம்பரியத்தில் போல்கி நகைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    முகலாயர்களின் காலத்தில் போல்கி நகைகள் கூடுதல் பொலிவுடன் அழகுடன் உருவாக்கப்பட்டன. ராஜ வம்சத்தினர் அணியக்கூடிய நகையாக விளங்கும் போல்கி நகைகள் அணியும் இளநங்கையர் அச்சு அசலான ஓர் ராஜ நங்கை தோற்றப் பொலிவை பெற்று விடுவார். அணிபவர் அழகை கூட்டுவதுடன் கம்பீரத் தோற்றத்தையும் போல்கி நகைகள் தருகின்றன. பிரத்யேகமான கலை வேலைப்பாட்டுடன் உருவாகும் போல்கி நகைகள் தனித்துவம் நிறைந்தவை. இதனை பெரிய விழாக்களிலும், திருமண விழாக்கலிலும் அணிந்து கொள்ளலாம்.

    குந்தன் நகைக்கும், போல்கி நகைக்கும் உள்ள வேறுபாடு:

    போல்கி நகைகளில் பயன்படுத்தப்படுபவை உயர்தரமான முற்றிலும் மதிப்பு மிக்க வைரங்கள், அதாவது வெட்டப்படாத, இயற்கையாய் கிடைத்த அதே வகையிலான வைரம். போல்கி நகைகள் அதிக பளபளப்பு மற்றும் விலை மதிப்பு மிக்கது.

    குந்தன் நகைகளில் கண்ணாடி கற்கள், சாதா கற்கள் மற்றும் செயற்கை கற்கள் பல பயன்படுத்தப்படுகிறது. தங்கம் போன்ற பல உலோகங்களில் குந்தன் நகை உருவானாலும் அதில் பதியப்படும் கற்களின் மதிப்பு குறைவே.

    போல்கி நகைகள் என்றென்றும் தன் பெயர் சொல்லும் அளவிற்கு உயர் மதிப்பு மிகுந்த நகையாகும்.

    போல்கி நகை வடிவமைப்பின் சிறப்புகள்:

    போல்கி நகைகள் பிரத்யேகமான தனிப்பட்ட வடிவமைப்பு முறைகள் மூலம் உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் வைர நகைகள் என்பவை செட்டிங் முறையில் உருராக்கப்படுபவை. ஆனால் போல்கி வெட்டப்படாத வைரங்கள் தங்க நகைகளில் கல் பதிக்க வேண்டிய பகுதிகள் சற்று சூடாக்கப்பட்டு அதில் கல் பதிய வைக்கப்படுகிறது. மதிப்புமிநக்க வெட்டப்படாத வைரம் தங்கத்துடன் உறுதியாக ஒட்டிக்கொள்ளும். நாளுக்கு நள் மதிப்பு உயரம் வைரம் நகைகளுக்கு எக்காலமும் இணைந்தே இருக்கும் சுலபத்தில் அதில் இருந்து கற்களை பிரிக்க முடியாது. இதன் மூலம் வைரத்தின் ஒளி பிரகாசம் அதிகமாய் வெளிப்படும்.

    நவீன நங்கையர்கேற்ற போல்கி நகைகள்:

    போல்கி எனப்படும் வெட்டப்படாத வைர நகைகள் அனைத்து வயதினரும் அணிய ஏற்ற வகையில் உருவாக்கப்படுகிறது. அதுவும் இளைஞர்கள் விரும்பி அணியும் வடிவமைப்பில் புதிய வேலைப்பாடும், ஜொலிஜொலிப்பும் நிறைந்த போல்கி நகைகள் வருகின்றன. போல்கி நகைகள் சற்று விலை அதிகமானது. அதனால் அதற்கேற்ப ஆராய்ந்து தரமான நகையை உருவாக்குதல் வேண்டும். வைர நகைகளை போன்று இதற்கும் மதிப்பாய்வு பல உள்ளன. அதிலும் இது இயற்கை வடிவிலான வைரம் என்பதால் இதன் மதிப்பும் அதிகம். விலையும் அதிகம்.

    பெண்கள் கழுத்துடன் அணியும் சோக்கர் நெக்லஸ்கள் போல்கி நகையில் மிக பிரபலமானது. இதனை ஒன்று அணிந்தாலே போதும். அவள் அங்கமெலாம் பிரகாசிக்க. அத்தனை சிறப்புமிக்க போல்கி சோக்கர் நெக்லசின் விலை என்பது 4 முதல் 12 லட்சம் வரை. அதிலுல்ள வைர எண்ணிக்கைக்கு ஏற்ப கிடைக்கிறது. போல்கி நகைகளில் காதணி, மோதிரம், பிரேஸ்லெட், வளையல் போன்றவையும் உருவாக்கப்பட்டு தரப்படுகிறது.
    Next Story
    ×