search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான ராஜ்மா சாதம்
    X

    சத்தான சுவையான ராஜ்மா சாதம்

    ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. ராஜ்மா சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொன்னி அரிசி - 2 கப்,
    தேங்காய்ப் பால் - 4 கப்,
    ராஜ்மா - 2 கப்,
    வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
    நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
    கொத்தமல்லி - அலங்கரிக்க.

    செய்முறை  :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ராஜ்மாவை முதல் நாள் இரவு அல்லது 10 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த தண்ணீரையே விட்டு, பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

    * அரிசியை ராஜ்மா வெந்த தண்ணீர், தேங்காய்ப் பாலுடன் கலந்து, 5 கப் தண்ணீர் விட்டு, உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் சூடானதும், சீரகத்தை வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின், வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

    * கடைசியாக வேக வைத்த சாதத்தை இத்துடன் சேர்த்துக் கலந்து, 2 அடுப்பில் மிதமான தீயில் வைத்த பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    * சுவையான சத்தான ராஜ்மா சாதம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×