என் மலர்

  ஆரோக்கியம்

  சுவையான மட்டன் கீமா முர்தபா
  X

  சுவையான மட்டன் கீமா முர்தபா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீமா முர்தபா அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு டிஷ். இந்த கீமா முர்தபாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  மைதா மாவு - அரை கிலோ
  கொத்து கறி - 250 கிராம்
  சீனி - ஒரு மேசைக்கரண்டி
  பால் - முக்கால் கப்
  உப்பு - ஒரு தேக்கரண்டி
  சோடா உப்பு - அரை தேக்கரண்டி
  இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  கரம்மசாலா - ஒன்றரை தேக்கரண்டி
  மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
  மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  உப்பு - ஒரு தேக்கரண்டி
  முட்டை - 2
  கேரட் - ஒன்று
  வெங்காயம் - அரை கிலோ
  உருளைக்கிழங்கு - ஒன்று
  கொத்தமல்லி தழை - 2 கொத்து
  புதினா - 2 கொத்து
  பச்சை மிளகாய் - 5
  தக்காளி - 2
  எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

  செய்முறை :

  * ஒரு பெரிய பாலுடன் சீனி, உப்பு, சோடா உப்பு சேர்த்து கரைத்து அதை மைதா மாவில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து, பெரிய அளவுக்கு உருண்டையாக உருட்டி அதில் எண்ணெய் தடவி உருட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.  * பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பொரித்து வைக்கவும்.  * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம்மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறிக் கொள்ளவும்.  * வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொத்து கறியை போட்டு வதக்கவும். பச்சை வாசனை வராமல் இருக்க அதில் இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி போட்டு வதக்கி, 5 நிமிடம் மூடி வைக்கவும்.

  * பின்னர் மூடியைத் திறந்து, அதில் நறுக்கின கேரட், உருளைக்கிழங்கை போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.

  * பிறகு மூடியைத் திறந்து, பிசறி வைத்துள்ள வெங்காய கலவையை போட்டு, சுமார் 10 நிமிடம் பிரட்டி விடவும்.

  * அடுத்து அதில் பொரித்த முட்டையை போட்டு அதையும் மசாலாவுடன் சேர்த்து கிளறி விடவும்.

  * ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு மாவு உருண்டையில் சிறிது மாவை எடுத்து உருட்டி வைத்து தட்டு அளவுக்கு தேய்த்து அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். பிறகு நடுவில் ஒரு கைப்பிடி அளவிற்கு மசாலாவை வைத்து, ஒவ்வொரு புறமாக மடிக்கவும்.

  * இதே போல் நான்கு புறமும் மடிக்க வேண்டும். உருண்டையாக உருட்டி விடாமல், சதுர அல்லது செவ்வக வடிவில் மாவை மடிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் உள்ளே உள்ள மசாலாவை குவித்து வைக்காமல், சற்று சதுரமாக பரப்பினாற்போல் வைத்துக்கொள்ளவும்.

  * வாணலியில் எண்ணெய் சிறிது அளவு ஊற்றி அதில் செய்து வைத்த முர்தபாவை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி சுற்றி விடவும். பிறகு திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.  * முர்தபாவில் முட்டையை உடைத்து ஊற்றியும் செய்யலாம். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும். அதை முர்த்தப்பாவின் மேலே ஊற்றி பரப்பி விடவும். இருபுறமும் இப்படி முட்டையை தடவி வேக வைத்து எடுக்கவும்.

  * இந்த ருசியான முர்தபாவை அப்படியே சாப்பிடலாம். கறி மசாலா தொட்டுக் கொண்டு சாப்பிட இன்னும் சுவையாய் இருக்கும்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×