search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா
    X

    ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா

    சிக்கன் மலாய் டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். அதிலும் ரம்ஜான் நோன்பு காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    மலாய் க்ரீம்(Malai Cream) - 1 டேபிள் ஸ்பூன்
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    பச்சை ஏலக்காய் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    துருவிய சீஸ் - 3 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி மூடி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    * மிக்ஸியில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி வெண்ணெய், க்ரீம், சீரகப் பொடி, ஏலக்காய், பச்சை மிளகாய், சீஸ் ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    * பிறகு அடுப்பை பற்ற வைத்து, க்ரில் கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி, நெருப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும்.



    * அப்படி சுடும் போது வெண்ணெயை அவ்வப்போது தடவி சுட வேண்டும்.

    * இப்படி அனைத்து சிக்கன் துண்டுகளையும் சுட்டு எடுத்தால், சிக்கன் மலாய் டிக்கா ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×