search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஈத் ஸ்பெஷல்: மிட்டா கானா
    X

    ஈத் ஸ்பெஷல்: மிட்டா கானா

    இஸ்லாமிய திருமணங்களில் பிரியாணியுடன் செய்யும் இனிப்பு வகையில் இந்த மிட்டா கானா மிகவும் பிரசத்தி பெற்ற இனிப்பு வகையாகும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - கால் கப்
    கேசரிகலர் மஞ்சள் (அ) சிவப்பு
    உப்பு - அரை சிட்டிகை
    இனிப்பில்லாத கோவா - ஒரு மேசை கரண்டி
    சர்க்கரை - அரை கப்
    நெய் - இரண்டு மேசை கரண்டி

    தாளிக்க :

    பட்டை - சிறிய துண்டு
    முந்திரி -  ஆறு
    திராட்சை -  ஆறு

    செய்முறை :

    * முதலில் அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.



    * ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க வைத்து அரிசியை போட்டு சாதம் வடிப்பது போல் உதிரியாக வடிக்கவும் .(தண்ணீர் கொதித்து அரிசி தட்டியதும் அதில் கலர் பொடி + உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிக்கவும்.)

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி திராட்சை,
    முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.

    * பின் அதில் பட்டை தாளித்து வடித்த சாதத்தை கொட்டி கிளறி சர்க்கரை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும்.



    * சர்க்கரை கரையும் போது கோவாவை சேர்த்து அனைத்து ஒன்றாக சேர்த்து வரும் போது நன்றாக கிளறி வறுத்து வைத்துள்ள திராட்சை, முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.

    * சுவையான மிட்டா கானா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×