என் மலர்

  ஆரோக்கியம்

  கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்
  X

  கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருப்பை வாயில் ஏற்படும் புற்று நோய் பாதிப்பினைப் பற்றி இன்றைய மருத்துவ உலகம் அதிக கவனம் செலுத்துகின்றது.
  கருப்பை வாய் என்பது கருப்பையின் கழுத்து புறம் போன்ற பகுதி. இதன் வாய் பெண் பிறப்புறுப்பின் உள் பாதையில் அமைந்துள்ளது. பெண்ணுக்கு 2 சினைப்பைகள் உள்ளன. இவை ஒரு குழாய் போன்ற அமைப்பின் மூலம் கர்ப்பபையின் இரு புறமும் இணைந்துள்ளது. மாதம் ஒருமுறை மாற்றி மாற்றி ஒவ்வொரு சினைப் பையிலிருந்தும் முட்டை வெளிவந்து குழாய் வழியாக கருப்பையினை அடையும்.

  ஆணின் விந்துவோடு இது சேர்ந்தால் கர்ப்பம் ஏற்படும். இல்லையெனில் கருப்பையின் உள் உருவான தடித்த அமைப்பு உரிந்து மாத விலக்காக வெளியேறும். கருப்பை வாய் எனப்படும் பகுதி தடித்த சதைகளால் ஆனது. சிறிய துவாரம் கொண்டது. இதன் மூலமே விந்து உள்ளே செல்ல முடியும். மாத விலக்கும் இதன் மூலமே வெளியேறும்.

  இந்த கருப்பை வாயில் ஏற்படும் புற்று நோய் பாதிப்பினைப் பற்றி இன்றைய மருத்துவ உலகம் அதிக கவனம் செலுத்துகின்றது. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இத்தாக்குதல் ஏற்படுகின்றது. இந்த புற்று நோய் தாக்குதலில் பல பிரிவுகள் உள்ளன. இந்த கருப்பை வாய் புற்று நோய் ஏன் ஏற்படுகின்றது?

  புற்று நோய் என்பதே கட்டுபாடில்லாத, முறையில்லாத நம் உடல் செல்களின் பிரிவும், பெருக்கமும்தான். அநேக செல்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாழ்நாள் அளவு உண்டு. அவை இறந்த பிறகு புது செல்கள் உருவாகும். ஆனால் இந்த முறையற்ற செல்களில் ஒரு பிரச்சினை உள்ளது.

  * அவை இறப்பதும் இல்லை
  * அவை பிரிந்து பெருகிக் கொண்டே இருக்கின்றன.

  இப்படி பெருகும் செல்களால் டியூமர் எனும் கட்டி உருவாகின்றது. இவை சில அல்லது பல சமயங்களில் புற்று நோய் கட்டிகளாக மாறுகின்றன. இந்த மாற்றத்திற்கான உறுதியான காரணம் இதுதான் என மருத்துவ விஞ்ஞானத்தின் ஆய்வில் இன்னமும் முழுமையாய் கூற முடியவில்லை. ஆனால் இவை புற்று நோய் கட்டிகளாக மாறுவதற்கான சில ஆபத்தான காரணங்கள் உள்ளன. மனித பப்பிலோமா வைரஸ் உடல் உறவின் மூலம் பரவும் வைரஸ் கிருமி. சுமார் இதில் 100 வகைகள் உள்ளன. இதில் 15 வகை பிரிவுகள் 99 சதவீதம் கர்ப்பப்பை வாய் புற்று நோயினை உருவாக்கி விடுகின்றன.

  * நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு, எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்பு உடையோருக்கு இவ்வகை பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது.
  * மிக அதிக ஸ்ட்ரெஸ் உடையோருக்கு இப்பாதிப்பு ஏற்படுகின்றது.
  * மிக அதிக குழந்தைகளைப் பெறுவோருக்கு ஏற்படுகின்றது.
  * மேலும் சில காரணங்கள் தனிப்பட்ட பரிசோதனைகளின் மூலம் கூறப்படுகின்றது.

  கருப்பை வாய் புற்று நோயின் அறிகுறிகள் (அதிக பொதுவான காரணங்கள்) :

  * இரு மாதவிலக்கிற்கு நடுவே ரத்தப் போக்கு ஏற்படுதல்.
  * உடலுறவிற்குப் பின் ரத்தப் போக்கு ஏற்படுதல்
  * மாத விடாய் காலத்திற்குப் பிறகு ரத்த போக்கு ஏற்படுதல்
  * உடலுறவில் வலி போன்ற சங்கடங்கள் ஏற்படுதல்
  * துர்வாடை கொண்ட நீர் போக்கு
  * நீருடன் ரத்தக் கசிவு
  * அடி வயிறு வலி

  ஆகியவை ஆகும்.

  முறையான மருத்துவ பரிசோதனை 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மிக அவசியம். ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கப்பட்டால் சிகிச்சை எளிதாகின்றது. சிகிச்சை முறைகள் பாதிப்பின் அளவினைப் பொறுத்து முடிவு செய்யப்படுகின்றது.
  வருமுன் தடுக்க: கருப்பைவாய் புற்று நோய் வராமல் தடுக்க ‘வாக்சின்’ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

  மருத்துவ உலகம் கண்ட முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ‘வாக்சினை’ வெளிநாடுகளில் 12-13 வயதிலிருந்தே மூன்று முறையாக ஒவ்வொன்றும் ஆறு மாத இடைவெளியில் கொடுக்கப்படுகின்றது. நம் நாட்டிலும் புற்றுநோய் உடலில் எங்கு பாதித்தாலும் சில அறிகுறிகள் உண்டு. அவை

  உடலில் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும். ஆனால் சில மாறுதல்கள் ஏதேனும் உடல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். புற்றுநோய் பாதிப்பு உடலில் ஏற்பட்டால் அதன் அறிகுறிகள்.

  * மார்பக கட்டி இருந்தால் அதனை உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மார்பக சருமத்தில் சற்று குழி போல் விழுந்தால், மார்பக காம்பு உள்ளிருத்திருந்தால், காம்பில் வடிதல் இருந்தால், சிகப்பு திட்டாக இருந்தால் உடனடி மருத்துவ கவனம் தேவை என்றறிக.

  * உடல் வீங்கியது போன்ற உணர்வு இருக்கும். இது எடை குறைவு, ரத்த வெளி போக்குடன் இருந்தால் மருத்துவ உதவி அவசியம். சில சமயங்களில் இவை சினைப்பை புற்று நோயாகக் கூட இருக்கலாம்.

  * இரு மாதவிலக்கு காலத்திற்கு இடையில் ரத்தப் போக்கு ஏற்பட்டால் பல காரணங்கள் இருக்கக் கூடும் என்றாலும் புற்று நோய் பாதிப்பு உள்ளதா எனவும் பரிசோதித்துக் கொள்ளவும்.

  * மச்சத்தின் நிறம், தோற்றம் அளவு இவற்றில் மாற்றம் ஏற்பட்டால் கவனம் தேவை.

  * சிறுநீர், மலம் இவற்றில் ரத்த கசிவு இருக்க பல காரணங்கள் உண்டு எனினும் புற்று நோய் பற்றிய கவனம் தேவை.

  * விழுங்குவதில் சிரமம், வாந்தி, எடை குறைவு இவற்றில் கவனக்குறைவு வேண்டாம்.

  * முயற்சி செய்யாது எடை குறைந்து கொண்டே வந்தால்.

  * அதிக உணவு, ஸ்ட்ரெஸ் இவை இரண்டுமே நெஞ்செரிச்சலை மிக அதிக அளவு கொண்டு போகும். மிக அதிக தொந்தரவு வயிறு, தொண்டை, சினைப்பை புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

  * விடாத ஜூரம், தொடர் சோர்வு, வலி

  1. பாதுகாப்பான, முறையான உடலுறவு முறை மட்டுமே கடைபிடிக்கப்பட வேண்டும்.
  2. முறையான மருத்துவ பரிசோதனை அவசியம்.
  3. மிக சிறிய வயதிலேயே பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை என்றிராமல் 21 வயதிற்கு பின்னர் என கடை பிடிக்கும் பொழுது புற்றுநோய் அபாயம் வெகுவாய் குறைகின்றது.

  கருப்பை வாய் புற்றுநோய் :

  * இரண்டு வித புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாய் ஏற்படுகின்றன.
  * ஒரு காலப்போக்கில் கருப்பைவாய் செல்கள் புற்றுநோய்செல்களாக மாறும் வாய்ப்பு சற்று கூடுதலாக உள்ளன.
  * ஆரம்ப காலத்தில் ஒரு பெண் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறி தெரியாமல் கூட இருக்கலாம்.
  * சிகரெட் பிடித்தல், இளவயது கர்ப்பம், பிரசவம் போன்றவை தாக்குதலின் தீவிரத்தினை அதிகப்படுத்துகின்றன.
  * மருத்துவ பரிசோதனை மிக அவசியம்.
  * இத்தாக்குதலால் ஏற்படும் இறப்புகளை முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வோர் தவிர்த்து விடலாம்.
  * 21 வயதிலிருந்தே இது அவசியம். திருமணமான அதாவது உடலுறவு ஏற்பட்ட மூன்று வருடங்களுக்குள் இந்த மருத்துவ பரிசோதனை அவசியம்.
  * எல்லா இட, வகை புற்று நோய்களைப் போல் இதிலும் 0-4 என்ற பிரிவுகள் உண்டு.
  * 80-95 சதவீத வெற்றி சிகிச்சை மூலம் பெற முடிகின்றது.
  * இதற்கான ‘வாக்சின்’ இளைய பெண் சமுதாயத்திற்கு மிக மிக அவசியம்.

  பெண்களுக்கு மட்டும் :

  கருப்பை வாய் புற்று நோய் இந்திய பெண்களிடம் அதிகம் காணப்படுகின்றது. பலவகை புற்று நோய் பிரிவுகளில் கருப்பை வாய் புற்று நோய் உலகில் பெண்களைத் தாக்கும் விதமாக இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இறப்பிற்கு காரணமாகி விடுகின்றது. இதன் தாக்குதல் 30-34 வயதிலும் 55-65 ல் அதிக அளவில் தாக்குதலுமாக இருக்கின்றது.

  இந்தியாவில் 365.71 மில்லியன் இளம் பெண்கள் 15 வயதில் உள்ளனர். சுமார் 74,000 இறப்புகள் வருடந்தோறும் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெண் சிறுமிகளுக்கு 9 வயதிலிருந்தே இந்த ‘வாக்சின்’ பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த வாக்சின் போட்டாலும் முறையான மருத்துவ பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றது. இதன் விலை மட்டுமே நம் போன்ற வளரும் நாடுகளின் பிரச்சினையாக உள்ளது. ஆனால் விரைவில் இது கூட சுமூகமாய் மாறும் நிலை உள்ளது.

  பொதுவான சில சுகாதார பாதுகாப்பு முறைகள் :

  கீழே கூறப்படுபவை புற்று நோய்க்காக மட்டும் கூறப்படுபவை அல்ல. சில சுகாதார முறைகள் பலருக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் கடைபிடிப்பதில்லை.

  * சுகாதார முறையில் நாப்கின்களை பயன்படுத்துங்கள்.

  * பருத்தி உள்ளாடையினை மட்டுமே அணியுங்கள்.

  * தொடர்ந்து சைக்கிள் உபயோகிப்பதனை மட்டுப்படுத்துங்கள்

  * காரமான சோப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தாதீர்கள்.

  * மிக காரமான உள் உறுப்பு சுத்தகரிப்பு பொருட்களை பயன்படுத்தாதீர்கள். அவை கிருமி, பீஸ்ட் வகை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

  * வெதுவெதுப்பான நீர், தரமான சோப்பு இவற்றினை தொடர்ந்து தினமும் உபயோகித்தால் துர்நாற்றம், கிருமி பாதிப்பு இராது.
  Next Story
  ×