என் மலர்
ஆரோக்கியம்

நெத்திலி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி
நெத்திலி கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் தேவாமிர்தம் போல் இருக்கும். நெத்திலி கருவாட்டு தொக்கை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நொத்திலி கருவாடு - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* கருவாட்டை வெதுவெதுப்பான நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கி கொக்கு பதத்தில் வந்தவுடன் (ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரவேண்டும்) நெத்திலி கருவாட்டை சேர்த்து 8 நிமிடம் பிரட்டி, உப்பு சுவை பார்த்து இறக்கினால், ருசியான நெத்திலி கருவாட்டு தொக்கு ரெடி!!!
* தொக்கு போல் விரும்புபவர்கள் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story