என் மலர்
ஆரோக்கியம்

மட்டன் இரத்த பொரியல் செய்வது எப்படி
மட்டன் இரத்தம் மிகவும் சத்தானது. இதனை பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மட்டன் இரத்தம் - 2 கப்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை :
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டன் இரத்தத்தை தண்ணீரில் அலசி ஒரு மண் சட்டியில் போட்டு நன்றாக பிசையவும்.
* பின்னர் அதனுடம் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து நன்றாக மீண்டும் பிசைந்து கொள்ளவும்.
* அனைத்தும் நன்றாக கலந்த பின் அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடிபிடிக்காமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
* இரத்தத்தில் இருக்கும் தண்ணீர் வற்றி உதிரியாக வரும் போது தேங்காய் துருவலை போட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்பு :
* இதில் எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. தேங்காய் துருவல் போடும் போது உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.
* நெல்லை மாவட்ட பகுதிகளில் இவ்வாறு தான் இரத்த பொரியல் செய்வார்கள்.
* மட்டன் இரத்தத்தில் ஆட்டின் முடி இ ருக்கும். அதனால் நன்றாக பார்த்து தண்ணீரில் அலசி செய்ய வேண்டும்.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story