என் மலர்

  ஆரோக்கியம்

  மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி
  X

  மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடை காலத்தில் கிடைக்கும் மாங்காயில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  மாங்காய் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
  சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  கடுகு - 1 தேக்கரண்டி
  பெருங்காயம் - 1 தேக்கரண்டி
  வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன் (வெந்தயத்தை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடிக்க வேண்டும்)
  மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி
  உப்பு - சுவைகேற்ப

  செய்முறை :

  * அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.

  * கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை சற்று குறைத்த பிறகு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை போட்டு 2 நிமிடம் கிளறவும்.

  * பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற விட வேண்டும்.

  * இந்தக் கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.

  * இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக 7 நாளிலிருந்து 8 நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

  * பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.

  * இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!!

  * வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.

  * அதை அப்படியே கெடாமல் ப்ரஷாக பாதுகாக்க விரும்பினால் சிறிது வினிகர் சேர்க்க வேண்டும்.
  Next Story
  ×