search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    உலக கோப்பை கால்பந்து:  2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது பிரான்ஸ்
    X

    பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே

    உலக கோப்பை கால்பந்து: 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது பிரான்ஸ்

    • முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது பிரான்ஸ்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.

    எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    Next Story
    ×