என் மலர்

  கால்பந்து

  உலக கோப்பை கால்பந்து: 2-0 கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது உருகுவே
  X

  உருகுவே அணி வீரர்கள் 

  உலக கோப்பை கால்பந்து: 2-0 கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது உருகுவே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் பாதியில் உருகுவே அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது.
  • உருகுவே வீரர் ஜார்ஜியன் அடுத்தடுத்து 2 கோல் அடித்தார்.

  கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஹெச் பிரிவில் இன்று இரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் கானா, உருகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 26 நிமிடத்தில் உருகுவே வீரர் ஜார்ஜியன் அரராஸ்கேட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

  தொடர்ந்து 32 நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்திய உருகுவே வெற்றி பெற்றது. எனினும் ஹெச் பிரிவில் அடுத்த சுற்றுக்கு கோல்கள் அடிப்படையில் தென்கொரியா 2வது அணியாக முன்னேறியதால், கானாவும், உருகுவேயும் போட்டியில் இருந்து வெளியேறின.

  Next Story
  ×