search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வெங்கானூர் சாவடிநடை பவுர்ணமிக்காவு கோவிலில் பிரபஞ்ச யாக பூஜை: நூற்றுக்கணக்கான பூசாரிகள் பங்கேற்பு
    X

    வெங்கானூர் சாவடிநடை பவுர்ணமிக்காவு கோவிலில் பிரபஞ்ச யாக பூஜை: நூற்றுக்கணக்கான பூசாரிகள் பங்கேற்பு

    • இந்த யாகம் வருகிற 6-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
    • பவுர்ணமி அன்று கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    வெங்கானூர், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் பிரபஞ்சயாக பூஜை நேற்று தொடங்கியது. நூற்றுக்கணக்கான பூசாரிகள் பங்கேற்ற இந்த யாகம் வருகிற 6-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 12 ஆயிரத்து 6 செங்கற்களை கொண்டு 6 யாக சாலைகள் அமைத்து 1008 அதி விசேஷமான மூலிகை மருந்துகள், பழவகைகள், தானியங்கள், நெய், தேன், சுகந்த திரவியங்கள், பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி முதலான பொருட்களை பயன்படுத்தி யாக பூஜை நடக்கிறது

    இதையொட்டி தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8-30 மணி வரையிலும் பிரதம பூஜை, கலச ஸ்தாபனம் தேவதை அனுமதி பூஜை, விக்னேஷ்வரா பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, வாஜி பூஜை, கஜ பூஜை, கங்கா பூஜை உள்பட ஏராளமான பூஜைகள் நடைபெறுகிறது. நேற்று கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தினர். மேலும் தினமும் மாலை 6 மணிக்கு மேல் சங்கீத கச்சேரி நடைபெறுகிறது. இந்த ஆண்டு பவுர்ணமிக்காவு தேவி கோவில் நடை பிரபஞ்ச யாகத்தை முன்னிட்டு நேற்று முதல் 6-ந்தேதி வரைதிறந்து இருக்கும். இதுதவிர பவுர்ணமியை முன்னிட்டு மே மாதம் 5-ந்தேதி, ஜூன் 4-ந்தேதி, ஜூலை 3-ந் தேதி, ஆகஸ்டு 1 மற்றும் 31 , அக்டோபர் 28, நவம்பர் 27, டிசம்பர் 26 ஆகிய தேதிகளிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    Next Story
    ×