search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோவிலில் 2-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு
    X

    திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோவிலில் 2-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு

    • வருகிற 1-ம் தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இரவு பத்து நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழகத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது தான் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில். அது போல் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாசனிதாயார், பட்டாபிஷேக ராமர், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து உற்சவர் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாள் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் கேடயத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று சனிக்கிழமையும் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 1-ம் தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இரவு பத்து நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பேஷ்கார் கண்ணன் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதே போல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் வருகின்ற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சேது மாதவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×