என் மலர்

  வழிபாடு

  தஞ்சை கீழவாசல் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது
  X

  தஞ்சை கீழவாசல் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று 4-ம், 5-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
  • நாளை 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

  தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவில் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. தஞ்சை நாடார்கள் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் மூலவர் சன்னதியின் இருபுறமும் உற்சவர் அம்மன், ஏனாதிநாயனார், வராகி அம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள், ஆஞ்சநேயர், குபேரன், காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் உள்ளன.

  இந்த கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பணிகள்மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

  குடமுழுக்கு விழாவையொட்டி விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தஞ்சை சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து புனித நீர் ஊர்வலம் எடுத்துவரப்பட்டது. பின்னர் முதல்கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

  இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், அதனைத்தொடர்ந்து கடம்புறப்பாடு, குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கு விழா திருப்பணி கமிட்டி தலைவர் வெள்ளைச்சாமிநாடார் தலைமையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.

  குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி முதல் தினமும் மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது.

  Next Story
  ×