என் மலர்
வழிபாடு

திருத்தணி முருகனின் தனிச்சிறப்பு
- மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
- முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணிகை. இந்த ஆலயத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை.
திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், திருத்தணி மலையின் கீழ் பகுதியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 'முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள், மலை மேல் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.
மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சன்னிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோவிலின் தனிச்சிறப்பு.
முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.
காதர் என்னும் இஸ்லாமியரால் கட்டப்பட்ட நவாப் மண்டபத்தில் ஆடிக்கிருத்திகை போன்ற திருவிழா காலங்களில் இஸ்லாமிய நண்பர்கள் வாத்தியம் இசைக்கின்றனர்.
வள்ளலார், கண்ணாடியில் முருகப்பெருமானின் தரி சனத்தைக் கண்டு அருள்பெற்றவர். அந்த முருகப்பெருமான், திருத்தணிகை முருகப்பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவருட்பா நூலில் `சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்' என்ற பாடலில், முருகனின் திருவருள் தரிசனம் பெற்ற அற்புதத்தைப் பற்றி வள்ளலார் கூறியுள்ளார்.






