என் மலர்
வழிபாடு

பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: மோகினி அலங்காரத்தில் கோதண்டராமர் வீதிஉலா
- கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
- அலங்காரம் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் கோதண்டராமர், 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7 மணியளவில் கருட சேவை நிகழ்ச்சி தொடங்கியது. அதில் உற்சவர் கோண்டராமர் தங்கம், வைர நகைகள் அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி இரவு 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.