search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி

    • தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
    • மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.

    கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

    உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.

    இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.

    இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×