என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவேங்கடமுடையான் கோவிலில் தேரோட்டம்
    X

    திருவேங்கடமுடையான் கோவிலில் தேரோட்டம்

    • 17-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது
    • 20-ந்தேதி குடிகாத்தான்பட்டி பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இத்திருவிழா நடக்கவில்லை.

    இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமி தினந்தோறும் இரவு ஹம்சவாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், சொர்ணகருட வாகனம், வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், வெள்ளி மஞ்சனம், சொர்ணகுதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த 11-ந்தேதி மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவேங்கடமுடையான் தேரில் எழுந்தருளி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து இரவு 7.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். விழாவையொட்டி புதன்கிழமை கோ ரதம் நிகழ்ச்சியும்,16-ந் தேதி வெள்ளி ரதம் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 17-ந்தேதி இரவு அலங்கார பங்களா தெப்பம் நிகழ்ச்சியும், மறுநாள் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 19-ந்தேதி மரக்குதிரை கண்மாய்க்கரைப்பட்டி மண்டகப்படிதாரர் சார்பில் பல்லக்கும், 20-ந்தேதி குடிகாத்தான்பட்டி பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடாசலம் செட்டியார் தலைமையில் கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×