search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா: இன்று ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா தொடங்கியது

    • ஆயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
    • நாளை தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருவையாறில் பழமைவாய்ந்த ஐயாறப்பர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . விழா நாட்களில் தன்னைத்தான பூஜித்தல், சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை, தேரோ ட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம், நாதஸ்வர இன்னிசை கச்சேரி, சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க கோவிலில் இருந்து ஏழூருக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐயாறப்பர் மற்றும் நந்திகேஸ்வரர் பல்லக்குகள் திருவையாறில் இருந்து புறப்பட்டு திருப்பழனத்துக்கு சென்றன. பின்னர் அங்குள்ள பல்லக்குடன் திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய ஊர்களுக்கு சென்று அந்தந்த பல்லக்குடன் தில்லைஸ்தானத்துக்கு இன்று இரவு சென்றடையும். அங்கு 7 பல்லக்குகளும் முகாமிடும். இந்த பல்லக்குகள் ஒவ்வொன்றாக நாளை காலை முதல் புறப்பட்டு திருவையாறு தேரடி திடலை பிற்பகலில் சென்றடையும். பின்னர் மாலையில் தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏழூர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று தீபாரதனை காண்பிக்க ப்படும். பின்னர் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடு களை தருமபுர ஆதீன சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×