என் மலர்

  வழிபாடு

  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
  X

  சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்த காட்சி.

  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விநாயகர் சாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளினார்.
  • குளத்தில் மூன்றுமுறை தெப்பம் வளம் வந்து உற்சவம் நடைபெற்றது.

  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  முக்கிய விழாவாக 27-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 2-ந் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. அதையொட்டி விநாயகர் சாமிசிறப்பு அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளினார், சிறப்பு தீபாராதனையுடன் கோவில் தீர்த்த குளத்தில் மூன்றுமுறை தெப்பம் வளம் வந்து உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

  Next Story
  ×