search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காமாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா

    • தெப்பத்திருவிழா மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூந்தமல்லி:

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைபூசத்தை முன்னிட்டு தெப்பத்திரு விழா 3 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.

    தெப்ப திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நேற்று வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தெப்பத்தில் பழங்கள், மலர், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாங்காடு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×