search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி
    X

    ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி

    • ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் ஆனிப்பெருங்கொடை விழா வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    • 23-ந்தேதி மாலையில் மாக்காப்பு சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் ஆனிப்பெருங்கொடை விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 23-ந்தேதி மாலையில் மாக்காப்பு சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந் தேதி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் மனோன்மணீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலம், பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜை, படைப்புடன் கூடிய சாமக்கொடை, சுவாமிக்கு பொங்கலிட்டு நேர்த்திக்கடனாக கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    கொடை விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருச்செந்தூர், சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், கொடைவிழா ஒருங்கிணைப்புக்குழு இ.நடராஜன், ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, தக்கார் கண்ணன், செயல் அலுவலர் வெங்கடேஸ்வரி, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சிவகுமார், மணிகண்டன், செந்தூர்பாண்டியன், சங்கரலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×