என் மலர்

  வழிபாடு

  புனித ராயப்பர் சின்னப்பர் ஆலய தேர்பவனி
  X

  புனித ராயப்பர் சின்னப்பர் ஆலய தேர்பவனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதன்மை குரு அருளப்பன் தலைமையில், வேண்டுதல் திருப்பலி நடந்தது.
  • இன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

  ஓமலூர் அருகே ஆர்.சி. செட்டிப்பட்டியில் உள்ள புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் திருத்தூய அர்ச்சிப்பு, பங்கு திருவிழா, புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் ஆகிய முப்பெரும் விழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

  விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சேலம் மறைமாவட்ட பேராயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருவிழா திருப்பலி, திருத்தூய அர்ச்சிப்பு, புதுநன்மை உறுதி பூசுதல் ஆகிய முப்பெரும் விழா ஆலயத்தில் நடைபெற்றது. மாலையில் சேலம் மாவட்ட முதன்மை குரு அருளப்பன் தலைமையில், வேண்டுதல் திருப்பலி நடந்தது.

  பின்னர் செவ்வாய்பேட்டை பங்குதந்தை அழகுசெல்வன் தலைமையில் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர். தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு ஆர்.சி. செட்டிப்பட்டி பங்கு தந்தை எட்வர்ட் ராஜன் தலைமையில் நடைபெறும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

  Next Story
  ×