search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது
    X

    மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது

    • திருவிழா 21-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.

    மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் கோடி அற்புதர் என போற்றப்படும் தூய அந்தோணியார் திருத்தல பங்கு அமைந்துள்ளது. இந்த திருத்தல பங்கின் திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

    திருவிழாவில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு கொடிபவனி, 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. விழாவில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ேயசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரை நிகழ்த்துகிறார். பங்கு அருட்பணியாளர் அந்தோணி எம்.முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள் வாழ்வு வழிகாட்டி டென்சிங் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 19-ந் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் அந்தோணி எம்.முத்து தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மரிய வில்லியம் மறையுரை நிகழ்த்துகிறார். அன்று மாலை திருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது. 20-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் ஜெகன் சில்வஸ்டர் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் மார்ட்டின் மறையுரை நிகழ்த்துகிறார்.

    திருவிழாவின் இறுதி நாளான 21-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி நடக்கிறது. 9.30 மணிக்கு அன்பின் விருந்து தொடங்குகிறது. தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட நிதி பரிபாலகர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் பெனடிக்ட் அனலின் மறையுரை நிகழ்த்துகிறார். 11 மணிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. 12.30 மணிக்கு அருட்பணியாளர் பென்னின் அனஸ் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் சகாயதாஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.

    மாலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.

    தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக சமய நல்லிணக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகள் திருத்தல பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவை, சிறப்பு நிதிக்குழு மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×