search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் யாக சாலை பூஜைகள் தொடக்கம்
    X

    சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் யாக சாலை பூஜைகள் தொடக்கம்

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.
    • இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.

    சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் உடனான பூரணை புஷ்கலை தேவியர் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாகவும் சிங்கம்புணரியின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவிற்கு ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. நேற்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.ராம அருணகிரி தலைமையில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, கோவில் கண்காணிப்பாளர் தன்னாயிரம், கிராம அம்பலம் சத்தியசீலன், கிராம முக்கியஸ்தர்கள் அடைக்கலம் காத்த நாட்டார்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதை தொடர்ந்து சேவகப்பெருமாள் உடனான பூரணை புஷ்கலை தேவியாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. தினமும் அன்னதான நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×