என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
    X

    அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

    • தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி விழாவில் கலந்து கொண்டனர்.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரி யம்மன் கோவில் 60-ம் ஆண்டு திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மஹா யாக சாலை பூஜையும், காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அம்மன் சப்பரமானது மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, பொட்ட லூர், நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், நாகல்குளம் ஆகிய ஊர்க ளுக்கு வீதிஉலா சென்று வந்தது. 10-ம் நாள் திருவிழா வான நேற்று இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பலர் பூக்குழி இறங்கினர். சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம்,தென்காசி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்திருந்த இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி விழாவில் கலந்து கொண்டனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன் பாண்டி தலைமையிலான அருணா பேரி மாரிச்செல்வம், முத்துக் குமார், கோவில் குருசாமி முருகன் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×