என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீர்காழி தென்பாதி முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

    சீர்காழி தென்பாதி முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
    • நாளை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

    சீர்காழி தென்பாதி பங்களா குளத்து மேட்டு தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதம் தீமிதி திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு நேற்று சட்டநாதபுரம் உப்பனாற்று கரையிலிருந்து பால்குடம், அலகு காவடி ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து கோவிலை அடைந்தனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து இரவு தீமிதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதையடுத்து அம்மன் வீதி உலா நடந்தது. இன்று (சனிக்கிழமை)மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×