என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- திருவிழா இன்று முதல் 11-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- 11-ந்தேதி அன்னையின் அலங்காரத் தேர் பவனி நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது இதற்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி, கொடியை ஏற்றி வைக்கிறார். பசிலிக்கா அதிபர் டோமினிக் எம்.கடாட்சதாஸ் முன்னிலை வகிக்கிறார். அதைத்தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் மறையுரையாற்றுகிறார்.
4-ந்தேதி காலை திருப்பலியும் அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சகாய மாதா நவநாள் தேர்பவனி நடக்கிறது. 8-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரத்தினம் தலைமை தாங்குகிறார்.
9-ந்தேதி காலை திருமுழுக்கு திருப்பலி நடைபெறுகிறது. இதில் அருட்பணியாளர் ஜோஸ்ராபின்சன் மறையுரையாற்றுகிறார். 10-ந்தேதி முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட பொறுப்பு ஆயர் ஆன்றனி பாப்புசாமி தலைமை தாங்குகிறார். மாலை 6 மணி திருப்பலிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார். மனித உரிமை வக்கீல் அருட்பணியாளர் .எம்.சி. ராஜன் மறையுரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது 11-ந்தேதி காலை 9 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். நாஞ்சில் பால் இயக்குனர் அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் மறையுரையாற்றுகிறார் 11 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கு அன்னையின் அலங்காரத் தேர் பவனி நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபர் டோமினிக் எம் கடாட்சதாஸ், இணை அதிபர் ஜெயக்குமார், பங்கு பேரவை துணைத் தலைவர் ஆண்டனி வால்ஜின்,
செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர் பெலிக்ஸ் ஆண்டனி ஜார்ஜ், பொருளாளர் ஏசுதாஸ் மற்றும் பங்கு மக்கள், இல்ல அருட் பணியாளர்கள் பக்த சபைகள் அருட் சகோதரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்