என் மலர்
வழிபாடு

குழந்தை பாக்கியம் அருளும் மாங்கனித் திருவிழா
- பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார்.
- மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.
காரைக்கால் அம்மையார் பிறந்த ஊரில் அவருக்கு ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இங்கு காரைக்கால் அம்மையாரே, மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட புனிதவதி மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த விழாவானது, இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார். அப்போது மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.
குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாத பெண்கள், இந்த மாங்கனிகளை தங்களது சேலை முந்தானையை விரித்து தாங்கிப் பிடிப்பர். அந்த மாங்கனியை சாப்பிடுவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.






