search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது
    X

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது

    • இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 10-ந்தேதி வலியப்படுக்கை நடக்கிறது.

    குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா அடுத்த மாதம் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாட்டு பூஜைகளும், சமய சொற்பொழிவு, சமய இன்னிசை விருந்து போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்வான வலியப்படுக்கை 10-ந் தேதியும், அதன்பின்னர் 'மகா ஒடுக்கு பூஜை' நடைபெறும். தொடர்ந்து 21-ந் தேதி எட்டாம் கொடை விழாவும், 25-ந் தேதி மீனபரணி கொடை விழாவும் நடைபெற உள்ளன. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

    திருவிழா தொடங்கும் 5-ந் தேதியன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்பு பஸ் வசதிகள், சுகாதார வசதிகள், மின்சார வசதி, பக்தர்கள் நீராட ஏ.வி.எம். சானலில் படித்தளம் ஏற்பாடு செய்தல், தெப்பக்குளத்தில் சுத்தமான நீர் நிறைத்தல், கோவில் சுற்றுப்புறத் தூய்மை பணிகள், பாதுகாப்பான தற்காலிக கடைகள் என அனைத்தும் கலெக்டரின் அறிவுறுத்தல்படி இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக படகு மற்றும் நீச்சல் வீரர்கள் என அனைத்து முன்னேற்பாடு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×