என் மலர்

  வழிபாடு

  மணக்குள விநாயகரின் சிறப்புகள்
  X

  மணக்குள விநாயகரின் சிறப்புகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த விநாயகருக்கு ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.
  • இந்த விநாயகரை வணங்கினால் மனதில் அமைதி உண்டாகும்.

  புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் ஆலயம், 17-ம் நூற் றாண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள திருக்குளத்தில் முன் காலத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்த சுவையான நீரினால்தான் விநாயகரின் திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. அக்குளம் மணலால் ஆனது.

  ஆதலால் அக்குளம் 'மணல் குளம்' என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'மணக்குளம்' என்று வழக்கில் வந்தது. எனவே விநாயகரும் 'மணக்குள விநாயகர் ஆனார். தற்போது அந்தக் குளத்தில் நீர் இல்லை. எனினும் பெயரினால் அந்தக் குளத்தின் பெருமை அழியாமல் உள்ளது.

  இந்த விநாயகருக்கு 'வெள்ளைக்காரப் பிள்ளையார்' என்ற பெயரும் உண்டு. புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தபோது விநாயகரின் அருமை அறியாமல், ஆங்கிலேயர்கள் அவரை கடலில் கொண்டு போய் போட்டனர். என்ன அதிசயம்.. சில நாட்களில் அந்தச்சிலை போட்ட இடத்திலேயே மிதந்தது கண்டு, அந்தப் பகுதி மக்கள் அந்தக் கடற்கரையில் ஆலயம் அமைத்து விநாயகரை வழிபட்டனர்.

  விநாயகரின் சிறப்பை உணர்ந்த வெள்ளைக்காரர்களும் அவரை வழிபட, அன்றிலிருந்து வெள்ளைக்கார பிள்ளையாராகி விட்டார். இந்த விநாயகரை வணங்கினால் மனதில் அமைதி உண்டாகும். விட்டுப்போன உறவுகள் தேடி வரும். காரியத்தடைகள் தாமதங்கள் விலகி வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

  Next Story
  ×