search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது
    X

    முகூர்த்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்.

    கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

    • மார்ச் 1-ந் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
    • மார்ச் 2-ந்தேதி பதிவேட்டை குதிரை வாகன உலா நடைபெறும்.

    கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா தொடங்குகிறது. 20-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி 21-ந் தேதி கொடியேற்றம், இரவு 7.30 மணிக்கு அக்னி சாட்டு விழா நடைபெற உள்ளது. 22-ந் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலாநடக்கிறது. 24-ந் தேதி இரவு திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் மார்ச் 1-ந் தேதி திருத்தேரோட்டம் மதியம் 2.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.அதன்படி ராஜ வீதி தேர் நிலை திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியா வீதி வழியாக மீண்டும் தேர்நிலை வந்தடையும். இதனைத் தொடர்ந்து மார்ச் 2-ந் தேதி பதிவேட்டை குதிரை வாகன உலா நடைபெறும். 3-ந் தேதி தெப்ப திருவிழா மற்றும் 4 -ந் தேதி தீர்த்தவாரிகொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் தலைவர் செல்வம் பெரியசாமி குழுவினர் செய்துள்ளனர். முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் மற்றும் ஸ்ரீராம் டுடோரியல் ராம்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×