search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கெங்கையம்மன் கோவில்
    X

    கெங்கையம்மன் கோவில்

    • ஆடிமாதம் 3-வது செவ்வாய்கிழமை கூழ்வார்ப்பார்கள்.
    • கூழ்வார்க்கும் கொப்பறை வழிந்து ஓடினால் மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் தென்மேற்கு மூலையில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் ஏழு வம்சாவழி பூசாரிகள் ஆடிமாதம் 3-வது செவ்வாய்கிழமையில் இந்த கோவிலில் கூழ்வார்ப்பார்கள்.

    அப்போது கூழ்வார்க்கும் கொப்பறை வழிந்து ஓடினால் அந்த ஆண்டு மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும் என்பது இன்றளவும் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கூழ்வார்த்தத் திருவிழா 5 நாட்கள் நடைபெறும். அதாவது மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று துர்கை அம்மன், புரடை அம்மன், கங்கை அம்மன் ஆகிய கோவில்களில் இருந்து பூங்கரகம் எடுத்து வந்து (திருமணம் ஆகாத ஆண்கள் கரகம் எடுப்பர்) இரவில் காப்பு கட்டுவார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை பருவதராஜ மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் பொங்கல் வைத்து படைப்பார்கள். சனி மற்றும் திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வார்கள்.

    செவ்வாய்க்கிழமை அன்று பம்பை, மேளம் முழங்க தீச்சட்டி ஏந்தியும், கூழ்குடங்களை சுமந்தும் ஊர்வலமாக சென்று கங்கையம்மன் கோவிலில் சாகை வார்ப்பார்கள். இது ஆண்டுதோறும் ஆடிமாதம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    Next Story
    ×