search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மே 13-ந்தேதி தொடக்கம்
    X

    கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மே 13-ந்தேதி தொடக்கம்

    • 12-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 20-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.

    சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபாலசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே மாதம் 13-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. மே 9-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, மே 12-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    13-ந்தேதி காலை கடக லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை சின்னசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா.

    16-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஆர்ஜித கல்யாண உற்சவம், இரவு சர்வபூபால வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா (கருடசேவை).

    18-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 20-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை தினமும் காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரையிலும் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்சவர் வேணுகோபாலசாமி தனித்தும், தனது உபயநாச்சியார்களான ருக்மணி, சத்யபாமாவோடு இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத், அன்னமாச்சாரியார் திட்டம் சார்பில் தினமும் காலை, மாலை ஆன்மிக, பக்தி இசை, கலாசார நிகழ்ச்சிகள், பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் நடக்கின்றன.

    அதைத்தொடர்ந்து மே 22-ந்தேதி மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

    Next Story
    ×