search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.
    • அலங்கரிக்கப்பட்ட கன்னியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் 36-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வந்த விழாவில் காலை, மாலை இரண்டு வேளையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் அம்மன் கரகம் எடுத்து திருவீதி உலா புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது.

    நேற்று மாலை 6 மணிக்கு பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

    இந்த தீமிதி திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கன்னியம்மன் மேளதாளம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பேரம்பாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×