என் மலர்
வழிபாடு

ஜேஷ்டாபிஷேகம் 2-வது நாள்: ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு முத்துக்கவசம் அணிவிப்பு
- உற்சவா்களுக்கு கவச பிரதிஷ்டை, ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று உற்சவா்களுக்கு கவச பிரதிஷ்டை, ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி முத்துக்கவசம் அணிவித்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






