search icon
என் மலர்tooltip icon

  வழிபாடு

  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்...
  X

  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்...

  • இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது.
  • இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை.

  1.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

  2. சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு உள்ள சாலைவசதி சிறப்பாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் இத்தலத்தை மிக எளிதாக சென்று அடையலாம்.

  3. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு வைப்பாறு, அர்ச்சனா நதியில் புனித நீராடிய பிறகே அம்மனை தரிசித்தனர். தற்போது அணை கட்டப்பட்டு விட்டதால் ஆண்டில் 90 சதவீதம் நாட்கள் இரு நதிகளிலும் தண்ணீர் ஓடுவது இல்லை. எனவே பக்தர்கள் குறை தீர்க்க நதிகளில் சிறுசிறு குடிசைகள் அமைத்து பம்ப்-செட் வைத்துள்ளனர். கட்டணம் செலுத்தி குளித்துவிட்டு அம்மனை தரிசிக்கலாம்.

  4. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எனவே பூஜைப் பெரிருட்கள் வெளியில் இருந்து வாங்கி வர வேண்டியதில்லை.

  5. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கருவறை இப்போதும் அப்படியே உள்ளது.

  6. கருவறையில் உள்ள பராசக்தி மாரியம்மன் சிலையை சதுரகிரி சித்தர் சிவயோக ஞான சித்தர் வடிவமைத்ததாக சொல்கிறார்கள்.

  7. இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது. அருள் பார்வை நிறைந்தது. அவள் முகத்தை எத்தனை மணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தாலும் பக்தர்கள் மனதில் சலிப்பே வராது.

  8. பூசாரி தீபாராதனை காட்டும் போது மாரியம்மன் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் அவள் கருணை பெரிங்க நம்மை பார்ப்பது போல இருக்கும்.

  9. கோவிலை சுற்றி காது குத்த, மொட்டை போட, விடலை தேங்காய் எறிய, ஆடு, கோழி சுத்தி விடுவதற்கு என்று தனித்தனியே வசதியான இடங்கள் உள்ளன.

  10. பக்தர்கள் வசதிக்காக கோவிலை சுற்றி 26 இடங்களில், சிறு, சிறு மண்டபங்கள் உள்ளன. என்றாலும் வசதியாக தங்கி ஓய்வு எடுக்க விரும்பும் பக்தர்கள் சாத்தூர் அல்லது விருதுநகரில் லாட்ஜூகளில் தங்குவதே நல்லது.

  11. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அம்மனிடம் வேண்டிக்கொண்டு மொட்டை போடுகிறார்கள். தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் வரை மொட்டை போடுகிறார்கள். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்.

  12. நிறைய பக்தர்கள் மேள, தாளம், முழங்க தீ சட்டி எடுத்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இதனால் கோவிலில் எப்போதும் மேள சத்தம் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது.

  13. இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை. அர்ச்சுனா நதியும் வைப்பாறும் தீர்த்தங்களாக உள்ளன.

  14. கோவில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்டதாக அமைந்துள்ளது.

  15. ஆடி வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபாடு செய்வார்கள். அப்போது பச்சைபட்டு உடுத்தி அம்மன் வீதி உலா வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.

  16. எந்த அம்மன் தலத்திலும் ஆடு, கோழி பலியிட மாட்டார்கள். ஆனால் இருக்கன்குடியில் ஆடி மாத விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும்.

  17. உலக நன்மைக்காக கடந்த ஆண்டு இத்தலத்தில் 10008 சங்கா பிஷேகம் நடத்தப்பட்டது.

  18. கோவிலை சுத்தமாக வைத்திருக்கும் பெரிறுப்பை திருப்பதி பத்மாவதி நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர். எனவே கோவில் எப்போதும் சுத்தமாக உள்ளது.

  19. இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி கிராமத்து மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

  20. இந்தக்கோவிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப்பகுதி மக்களிடம் இருக்கிறது.

  21. இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவரான இந்தப் பூசாரிப் பெண்ணின் குடும்பத்தினர் வழியில் வந்தவர்கள் இந்தக்கோவிலின் பரம்பரைப்பூசாரிகளாகவும், கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து நிர்வகித்து வந்தனர்.

  22.தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை இக்கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்ட பின்பு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மட்டும் அந்த குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதுடன் அறங்காவலர் பெரிறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

  23.கோவிலின் தெற்குப்பக்கம் வைப்பாறு, வடக்குப்பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கைகுடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது.

  24.இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

  25.அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கன் பானை எடுத்து வலம் வருதல் போன்றவைகள் மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.

  26. இங்கு குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.

  27. உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர்.

  28.இதுதவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது. (பெரிதுவாக எந்த மாரியம்மன் கோவில்களிலும் ஆடு, கோழி போன்றவைகளை உயிர்ப்பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தக்கோவில்களில் இருக்கும் கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களுக்குதான் உயிர்ப்பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இது மாரியம்மனுக்குச் செய்யும் வேண்டுதலாகிக் கொண்டிருக்கிறது).

  29.தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

  30.இத்தலத்தில் உள்ள வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.

  32.அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  33.சென்னை மாகாண கமிஷனர் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இனாம் மானியமாக 49 ஏக்கர் 19 செண்டும், ரொக்க மானியமாக ரூ.5-ம் கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன.

  34. இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது.

  35.1605-ம் ஆண்டு மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்து வந்தனர்.

  36. இருக்கன்குடி மாரியம்மன் தனக்கு ஆடி மாதம் பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர் ஒருவர் கனவில் வந்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு முதல் அங்கு ஆடி பிரமோற்சவம் நடந்து வருகிறது.

  37. சித்தார்த்தி ஆண்டில் (1093) சி.காளியப்ப நாடார் என்பவரால் ஓடு போட்ட மடம் ஒன்று அம்மனுக்கு உபயமாக கட்டி கொடுக்கப்பட்டது.

  38. பாலை யம்பட்டி பெரியி லாந்தாஸ் என்பவர் அம்மன் மீது கீர்த்தனம் பாடி உள்ளார்.

  39. முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை மாலை பதிகம் செய்துள்ளார்.

  40. 1925-ம் ஆண்டு துலுக்கங்குளம் அருளானந்த கருப்பையா ராஜா என்பவர் 'செந்தமிழ் பதிகம்' பாடி உள்ளார்.

  41. சாத்தூர் தொழில் அதிபர் ஒருவர் ரூ.4 லட்சம் செலவில் இத்தலத்து அம்மனுக்கு தங்க கவசம் செய்து கொடுத்துள்ளார்.

  42. பழனி கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை செல்வது போல தை மாதம் விரதம் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

  43. மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட மக்கள் மத்தியில் இத்தலம் மிகச் சிறந்த சக்தி பீடமாகத் திகழ்கிறது.

  44. இருக்கன்குடி மாரியம்மன் தென்மாவட்ட பக்தர்களின் கனவில் தோன்றி உத்தரவிட்டதற்கு பல நூறு ஆதாரங்கள் உள்ளன.

  45. நாளுக்கு நாள் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியபடி உள்ளது.

  46. ஆதி காலத் துக்கு பெருமை வாய்ந்த இத்திருக் கோவிலில் ராஜகோபுரமும், தேரும் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. அம்பாள் அருளால் இந்த குறைகள் வெகு விரைவில் தீர உள்ளன.

  47. அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பும் தேதியை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட நாளில் கட்டளைத்தாரர் சார்பாக அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி அன்றைய கட்டளைத் தாரர்களுக்கு கோவில் சார்பாக பிரசாதம் அனுப்பப்படுகிறது.

  48. தை, பங்குனி, ஆடி மாதங்களில் இத்தலத்தில் சிறப்பான விழாக்கள் நடத்தப்படுகின்றன.

  49. இத்தலம் பற்றிய கூடுதல் தகவல்களை www.irukkangudi-mariamman.org என்ற இணையத்தளத்தில் காணலாம்.

  50. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் முகவரி வருமாறு:- அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இருக்கன்குடி, சாத்தூர் தாலுகா, விருதுநகர் மாவட்டம்.

  போன்:04562-259614, 04562-259864, 04562-259699.

  Next Story
  ×