search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தோஷம் போக்கும் இருக்கன்குடி மாரியம்மன்
    X

    தோஷம் போக்கும் இருக்கன்குடி மாரியம்மன்

    • ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.
    • ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருவிழா கோலாகலத்தை காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்தலில் தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபடி உள்ளனர்.

    தீ சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடித்துக்கொள்ளவும் தினந்தோறும் பக்தர்கள் வந்தபடி இருக்கிறார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. என்றாலும் தை, பங்குனி, ஆடி ஆகிய 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் வகையில் பக்தர்கள் அலை, அலையாக வருவதை காணலாம். இந்த 3 மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை நாட்களில் மாரியம்மன் அருள் பெற திரளும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும்.

    இந்த 3 மாதம் தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது. பெரிதுவாக ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.

    தேவலோகத்தில் தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் பகல் பெரிழுதுவாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் இரவு பெரிழுதுவாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஆடி மாதம் பகல் முடிந்து இரவு நேரம் தொடங்கும் காலமாக கருதப்படுகிறது.

    இதை தட்சிணாயன புண்ணிய காலம் என்பார்கள். இத்தகைய புண்ணிய காலத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் மட்டுமே ஊர் மத்தியில் உள்ள உற்சவ அம்மன் வெளியில் வீதி உலா வருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நித்தம், நித்தம் தன்னைத் தேடி வரும் பக்தர்களை தானே தேடிச் சென்று தரிசனம் தருவது தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.

    ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3-வது வெள்ளிக்கிழமையன்று கொடியேற்ற வைபவம் நடைபெறும். அன்று காலை 5 மணியளவில் இருக்கன்குடி கிராம பெரிது மக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலைக்கொடி கட்டுவார்கள். இதில் நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பெரிதுமக்கள் கலந்து கொள்வார்கள்.கடைசி வெள்ளிக்கிழமையன்று பகலில் ரிஷப வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் கோவிலில் இருந்து எழுந்தருள்வாள். பிறகு வீதி வலம் வருவாள்.

    நதியில் அம்மன் உலா வரும் போது மக்கள் திரளாக நின்று வணங்குவார்கள். பிறகு மூலவர் கோவிலை சென்றடையும் அம்மன் இரவு முழுவதும் அங்கு சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவாள்.

    மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மேல் மூலவர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர் மத்தியில் இருக்கும் உற்சவர் கோவிலை மீண்டும் அம்மன் சென்று அடைவாள். அப்போது பக்தர்கள் மேள, தாளம், நகரா ஒலி எழுப்ப உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.

    ஆடி பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    Next Story
    ×