என் மலர்
வழிபாடு

ஆலயத்திற்குச் செல்லும் ஒருவர் தொடக்கம் முதல் இறுதி வரை செய்ய வேண்டியவை
- கோபுரத்தை ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட வேண்டும்.
- பெண்கள் தங்கள் இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகவும் வைத்துக் கும்பிட வேண்டும்.
முதலில் கோபுரத்தை நெருங்கும்போது, ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேலும்; பெண்கள் தங்கள் இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகவும் வைத்துக் கும்பிட வேண்டும். பெண்கள் ஒருபோதும் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிவைத்து வணங்கக்கூடாது.
அதன்பின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்கி, வலம்வர வேண்டும். ஆலயங்களில் கொடிமரம் தாண்டி, எந்தச் சன்னிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது. வலம் வரும்போது கருவறையின் பின்னால் இருக்கும் தெய்வங்களையும் வணங்க வேண்டும்.
அப்படியே வலம் வந்து மூலவர் தரிசனம் முடித்து, மறுபடியும் கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்க வேண்டும். அதன்பின் சற்றுநேரம் ஆலயத்தில் ஒரு பக்கமாக அமர்ந்து, பின்பு வெளியேவர வேண்டும்.
சைவ ஆகமங்கள் 28; பாஞ்ச ராத்திரம், வைகானசம் என்பவை வைணவ ஆகமங்கள். இந்த இரண்டிற்கும் சில வேறுபாடுகள் இருக்குமே தவிர, வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்காது.






