search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஏகாதசியன்று செய்யக்கூடாத செயல்கள்

    • இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.
    • கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை சாப்பிடக்கூடாது.

    ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவு நாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும்.

    அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்).

    ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.

    தேவையானதை முதல் நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

    Next Story
    ×