என் மலர்

  வழிபாடு

  திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
  X

  திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி தனிமையில் பவித்ர உற்சவம் நடந்தது.
  • பவித்ர உற்சவத்தில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

  திருப்பதியில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் பவித்திர உற்சவம் நடந்தது. பவித்திர உற்சவத்தையொட்டி வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

  கொரோனா தொற்று பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி தனிமையில் பவித்ர உற்சவம் நடந்தது. இந்த ஆண்டு பவித்ர உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

  பவித்ர உற்சவத்தில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

  மேலும் சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறை ஆகியவற்றையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வைகுந்தம் காம்ப்ளக்ஸ் 25 அறைகளும் நிரம்பி நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். 15 முதல் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

  நேற்று திருப்பதியில் 74,497 பேர் தரிசனம் செய்தனர். 36,244 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

  Next Story
  ×