என் மலர்
வழிபாடு

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
- 17-ந்தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் விடுமுறை நாட்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் சிரமம் அடைந்தனர். சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் ஒரு பக்தருக்கு 4 லட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டன
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. நேற்று மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர். 24 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 3 மணி நேரத்திலும், இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந்தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் அதற்குண்டான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பதியில் நேற்று 67,300 பேர் தரிசனம் செய்தனர். 32,802 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






