search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    • நாளை தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 19-ந்தேதி கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு முட்டம் வட்டார முதல்வர் ஜான்ரூபஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். கன்னியாகுமரி வட்டார முதல்வர் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 13-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. கிறிஸ்துநகர் குருக்கள் இல்ல அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். இளைஞர் பணிக்குழு இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.

    விழாவில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு பார்வதிபுரம் பங்குதந்தை அருள் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி, மாலை 6 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க திருமண நீதிமன்ற நீதிபதி அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்கி கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றித்திருப்பலி, கொடியிறக்கம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டோனி ஜெரோம், இணை பங்குதந்தை ஜேக்கப் ஆஸ்லின், பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் டென்னிஸ் பிராங்ளின், செயலாளர் சார்லெட் மேரி, பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ், துணை செயலாளர் சகாய ஞான திரவியம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×